Friday, December 21, 2018

தொடக்ககல்வி: பள்ளி சான்றிதழில் சாதி, மதம் ஆகியவற்றை குறிப்பிட விருப்பால் இல்லாதவர்களுக்கு உரிமை வழங்குதல் அரசாணை


TAMS இராமநாதபுரம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் திரு.S.முருகேசன் அவர்கள் தலைமையில் 21/12/2018 இன்று நடைபெற்றது.



 TAMS இராமநாதபுரம் பொதுக்குழு கூட்ட செய்தி


இன்று 21/12/2018 வெள்ளிக்கிழமை இராமநாதபுரம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

.கூட்டத்திற்கு

மாவட்ட தலைவர் திரு.S.முருகேசன் அவர்கள் தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் திரு.P.S.S.லிங்கதுரை அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாவட்ட அமைப்பு செயலாளர் திரு.V.கனகராஜ்,

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.M.முனீஸ்வரன்

மாவட்ட செய்தி தொடர்பாளர் திரு.S.R.காளிதாசு

மாவட்ட மகளிரணி செயலாளர் திருமதி.N.மகாராணி

மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திருமதி.N.செல்வரானி

ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட துணை தலைவர்கள், மாவட்ட துணை செயலாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்,வட்டார பொறுப்பாளர்கள்
உள்ளிட்ட அனைவரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள்,மாவட்ட துணை பொறுப்பாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்,வட்டார தலைவர்கள், வட்டார செயலாளர்கள், வட்டார பொருளாளர்கள்

ஆகியோரின் பொருப்புகள் இறுதி செய்யப்பட்டன.

பொறுப்பாளர்கள் அனைவரும் தங்களது பொறுப்புகளுக்கு ஏற்றவாறு சங்கப் பணியாற்ற வேண்டும்.

நமது சங்கம் மற்றும் ஜாக்டோ-ஜியோ நடத்தும் போராட்டங்களில் அனைத்து பொறுப்பாளர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.

பொறுப்பை சரிவர செய்ய முடியாதவர்கள் தானாகவே பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டு அடுத்தவருக்கு வழிவிட வேண்டும்.

வாட்ஸ் ஆப் குழுக்களில் தேவையற்ற விவாதம் செய்வது தவிர்க்கப்பட வேண்டும்
.
உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டன.

2019 ஆம் ஆண்டுக்கான உறுப்பினர் சேர்க்கையை அனைத்து பொறுப்பாளர்களின் ஒத்துழைப்போடு சிறப்பாக நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

... இறுதியில் ...

மாவட்ட சட்ட ஆலோசகர் திரு.S.பாலமுருகன் அவர்கள் நன்றி கூறினார்.

✍✍TAMS RAMNAD✍✍
*மாவட்ட செய்தி தொடர்பாளர்*
*S.R.காளிதாசு*







2018-19 ஆம் ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கான ஊதிய ஆணை வெளியீடு

அரசு பள்ளிகளில், இனி கட்டாயமாக ஆங்கிலம் பேச வேண்டும்!! அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி!!


அரசு பள்ளிகளில், இனி கட்டாயமாக ஆங்கிலம் பேச வேண்டும்!! அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி!!

 கோபி, நாமக்கல்பாளையத்தில் நடந்த சிறப்பு மனு நீதி நாள் முகாமில் கலந்துகொண்ட கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம், "

பன்னிரெண்டாம் வெறுப்பு முடிந்தவுடனே மாணவ, மாணவிகளுக்கு வேலை கிடைக்குமாறு புதிய பாட திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கன்வாடி பள்ளியுடன் இணைந்து 4 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குழந்திங்க்ளுக்கும் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்பு தொடங்க இருக்கின்றோம். 

இதனை தொடர்ந்து இக்குழந்தைகளுக்கு ஆங்கிலம் சரளமாக பேச பயிற்சியும் வழங்க இருக்கின்றோம். அதனுடன், அனைத்து அரசு பள்ளிகளிலும் ''மெய் நிகர்''(ஸ்மார்ட் க்ளாஸ்) வகுப்பறை அமைக்கப்படும்.' என்றும் கூறியுள்ளார். 

 இப்பாடத்திட்டம் அவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் விதத்தில் இருக்கும். மேலும், மாணவர்களுக்கு புதிய வகையான சீருடைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம் என்றும் கூறினார்.

அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவு



முன் அனுமதியின்றியும், விடுப்பு விண்ணப்பம் அளிக்காமலும் விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையில், முன் அனுமதியின்றியும் விடுப்பு விண்ணப்பம் அளிக்காமலும் விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்க தவறும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். 

அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் போது அல்லது ஒழுங்கு நடவடிக்கையின் போது உயிரிழந்தால், பணி விதிகளின்படியே ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்”  இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த கல்வியாண்டு முதல் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை தமிழக அரசு அறிவிப்பு




ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை

வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை

நிதித்துறை அறிவுறுத்தலின்படி கல்வித்துறை அதிரடி முடிவு

உபரி ஆசிரியர்கள் இருக்கும் போது பணி நீட்டிப்பு வழங்குவதால், பணம் விரயம் என நிதித்துறை கருத்து

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்

கல்வி ஆண்டில் பாதியில் ஓய்வு பெற்றால் அடுத்த ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு செய்யும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது.

GO

PDF LINK CLICK HERE



அனைவருக்கும் கல்வி இயக்கம்: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் குறிக்கோள்கள், இலவசக் கட்டாயக் கல்வி உரிமை சட்டம், பெண் கல்வியின் முக்கியத்துவம் சுத்தம் சுகாதாரம் சார்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம் போட்டிகள் நடத்தி பரிசு வழங்குவது குறித்த விளக்கம்

TNSCHOOLS APPLICATION இல் மாணவர் வருகையை சமர்ப்பிப்பது எப்படி பட விளக்கத்துடன்













தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 4 மாதமாக சம்பளம் இல்லாமல் தவிப்பில் பட்டதாரி ஆசிரியர்கள்


2.8 லட்சம் அரசு பள்ளிகளை இணைக்க முடிவு கல்வியாளர்கள் ஆசிரியர்கள் எதிர்ப்பு...


Popular Posts