Tuesday, January 9, 2018

07.01.2018 அன்று நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க(TAMS) மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக்கூட்டம்

07.01.2018 திருச்சி மாநகரில் நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் (TAMS) 
மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக்கூட்டம்.

மாவட்ட தலைவர் அம்பேத்கார் தலைமையில் கலந்து கொண்ட கடலூர் மாவட்ட TAMS..











.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் ( TAMS) -ன் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் திருச்சிராப்பள்ளி ஆசிரியர் இல்லத்தில் இன்று 07/01/2018-ல் நடைபெற்றது.
அதில் மாநிலத் தலைவர் திரு. கு.தியாகராஜன் தலைமை தாங்கினார். 
மாநிலச் செயலாளர் திரு.ஏ. இரமேஷ் மற்றும் மாநில தலைமை நிலையச் செயலாளர் அருள் குமார், மாநில அமைப்புச் செயலாளர் திரு. தாமோதரன், மாநில துணைத் தலைவர் உலக நாதன், ரமேஷ், மாதேஷ்வரன், ராஜ சேகரன் மாநில செய்தித் தொடர்பாளர் வெங்கடேசன மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

அதில் பின்வரும் தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன
TAMS மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்...
1) 01/04/2003 க்குப் பின்னர் பணியேற்ற ஆசிரியராகப் பணியேற்றோருக்கு Cps இரத்து செய்திடல் வேண்டும். IAS அதிகாரி ஸ்ரீதர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை உடனே பெற்று அமல் படுத்த வேண்டும்
2) இடைநிலை மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களைதல்.
3) 21 மாத PC arrears வழங்கிடல்
4) AEEO பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக மாற்றுதல்
5) உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் பழைய நிலை தொடர்தல்....
6) ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பிணை உறுதி செய்தல்....
7) பகுதி நேர ஆசிரியர்களுக்கு உடனே பணி நிரந்தரம் செய்தல்...
8) ஆசிரியர்களுக்கு எதிரான பொய்யான பாலியல் குற்றச்சாட்டுகளை கைவிடுதல் வேண்டும்...
9) சமூக அறிவியல் பாடத்திற்கு 5 பாட வேளைகளுக்கு பதில் 7 பாடவேளைகளாக மாற்றுதல் வேண்டும்
10) மாணவர்கள் நலன் சார்ந்து பாடத்திட்டத்தை அமைக்க வேண்டும்...
அதில் எந்தவிதமான காவித்துவமும் கலக்காமல் அமைத்திட வேண்டும்.

11. ஆசிரியர்கள் உயர்கல்வி பயில முன், பின் அனுமதியை இரத்து செய்திடல் வேண்டும்
12) 3-வது ஊக்க ஊதியத்தை தகுதியுள்ள ஆசிரியர்களுக்கு வழங்கிட வேண்டும்.
13) தேர்வு பணிகள் குழறுபடி இல்லாமல் நேர்மையாகவும் பணி மூப்பு அடிப்படையிலும் இருத்தல் வேண்டும்
14) தமிழ், ஆங்கிலம் வினாத்தாள்கள் இரண்டு தாள்களாக இல்லாமல் ஒரே வினாத்தாள் அமைத்திட வேண்டும்
15) TRB ரேங்க் அடிப்படையில் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறையை இணைத்து பதவி உயர்வு வழங்க வேண்டும்
16) மாணவர் நலன் கருதி TEAM visit - ஐ இரத்து செய்தல் வேண்டும். இதனால் கற்பித்தல் கற்றல் பாதிக்கப் படுகிறது.
17) கல்லூரி பேராசிரியர் நியமனத்தில் 50% ஆசிரியர் களுக்கு பதவி உயர்வாக வழங்கிடல் வேண்டும்
18) 2004 - 2005 ஆம் ஆண்டு பட்டதாரி ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்களுக்கு TRB ரேங்க் அடிப்படையில் முதுகலை ஆசிரியர்களாக பள்ளிக்கல்வித் துறைக்கு நியமிச்சு வேண்டும்.
19) மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா சீருடை, புத்தகப்பை, கணித உபகரணப் பெட்டி, முழு காலுறை (shoe) தரமானதாக வழங்கிட வேண்டும்
20) ஆசிரியர்களுக்கு தேவையில்லாமல் தரப்படும் பணியிடைப் பயிற்சிகளை இரத்து செய்திடல் வேண்டும்
21) உதவி தலைமை ஆசிரியர் பணியிடம் அனைத்து நிலையிலும் பணப் பலனோடு வழங்கிட வேண்டும்.
22) மேலதிகாரிகளின் தவறான ஆணையின்படி பாதிக்கப்பட்ட ஆசிரியர் நிதி மன்றத்தை நாடும் பட்சத்தில் அனைத்து நீதி மன்ற செலவினையும் சம்மந்தப்பட்ட அதிகாரியே ஏற்க வேண்டும்
23) தொடக்கக் கல்வி துறைக்கு பள்ளித் துணை ஆய்வர் (DI) பணியிடம் மேற்கொள்ள வேண்டும்.
24) தொடக்கக் கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறைக்கு இரு CPS நம்பர் இல்லாமல் ஒரே நம்பர் கொடுக்க வேண்டும்
25) சமூக அறிவியல் பாடத்தில் same major, Cross major முரண்பாட்டை களைந்திட வேண்டும்
26) TRB குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கையினை CBCID -க்கு மாற்றிட வேண்டும்.
27) பட்டதாரி ஆசிரியர்களை பணியில் இளைய BRT அல்லது DI அவர்களை ஆய்வு செய்யக் கூடாது
28) ஆசிரியர்களுக்குள் மடிக்கணினி இலவசமாக வழங்கிட வேண்டும்.
29) அரசுப் போச்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு பரிவுடன் கவனத்தில் கொண்டு அவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்

Popular Posts