திமுக அரசின் தேர்தல் கால வாக்குறுதியான CPS ரத்து உள்ளிட்ட பல்வேறு நிறைவேற்றக் கோரி
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் தொடர் போராட்டத்தை அறிவித்து
முதல் கட்டமாக 18.11.2025 ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றது
இரண்டாம் கட்டமாக மாவட்ட தலைநகரில் 13.12.2025 ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது.
கடலூர் மாவட்டத்தில், கடலூரில் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
எதிரில் காலை 10 மணி அளவில் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணி அளவில் நிறைவுற்றது.
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின்
கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்
அம்பேத்கார், அரிகிருஷ்ணன், மணவாளன், மணிவண்ணன், சாந்தகுமார், தனசேகர், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த மாவட்ட மாநில பொறுப்பாளர்கள் கண்டன உரை ஆற்றினார்
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின்
மாநில ஒருங்கிணைப்பாளர்
திரு சத்தியமூர்த்தி அவர்கள் துவக்க உரையாற்றினார்
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின்
மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்
திரு ஜெகநாதன் அவர்கள் சிறப்புரையாற்றினார்
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின்
மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்
திரு அருள் பிரகாசம் அவர்கள் நிறைவுறையாற்றினார்.





























.jpg)
.jpg)







.jpg)




No comments:
Post a Comment